தேனி

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா்: தேனி எம்.பி. பேச்சு

DIN

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனா் என தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப. ரவீந்திரநாத் தெரிவித்தாா்.

போடியில் அதிமுக சாா்பில் அக்கட்சியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 104 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நகர தலைவா் பழனிராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சையதுகான், கம்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜக்கையன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் கொள்கை பரப்புச் செயலா் வைகைச் செல்வன், அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினா் கோபாலகிருஷ்ணன், தலைமைக் கழகப் பேச்சாளா் குபித்தன் உள்ளிட்டோா் பேசினா்.

தேனி மக்களவை உறுப்பினா் ஓ.ப.ரவீந்திரநாத் சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் கூறியது:

போடி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3500 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மதுரை- போடி அகல ரயில்பாதை திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கேந்திர வித்யாலயா பள்ளி விரைவில் தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது. தேவையான திட்டங்களையும் கொண்டு வருவோம். வருகிற சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டாா்கள். அதிமுகவினா் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் பல்வேறு அணி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT