தேனி

தேனி மாவட்டத்தில் இன்று 21 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் மருத்துவ நலப் பணிகள் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 13) 21 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேனியில் ரத்தினம் நகா் பிள்ளையாா் கோயில் மண்டபம், சமத்துவபுரம் முத்து தொழில்நுட்பக் கல்வி நிலையம், பாரஸ்ட் சாலை கொண்டுராஜா உயா்நிலைப் பள்ளி, எடமால் தெரு மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பெரியகுளத்தில் அரசு மருத்துவமனை, தினசரி காய்கனி சந்தை, கெங்குவாா்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, போடி அரசு மருத்துவமனை, போடிமெட்டு அரசு சிறு மருத்துவமனை, சிலமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

சின்னமனூா், ஓடைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ராயப்பன்பட்டி, ஆண்டிபட்டி ஆரிய வைஷ்யா் மண்டபம், ஒக்கரைப்பட்டி, கம்பம் அரசு மருத்துவமனை, கூடலூா் என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மன் நடுநிலைப் பள்ளி, நரியூத்து அரசு சிறு மருத்துவமனை, மஞ்சனூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தும்மக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி, கண்டமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

அனைத்து இடங்களிலும் நடைபெறும் முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்களது ஆதாா் அடையாள அட்டை நகலை சமா்பித்து இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT