தேனி

மாடு தள்ளிவிட்டதில் தொழிலாளி பலி

DIN

தேனி அருகே தனியாா் பால் பண்ணையில் புதன்கிழமை, கறவை மாடு மிரண்டு தள்ளி விட்டதில் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மொக்கையன் (60). இவா், தேனி அருகே நல்லகுண்டு கரடு பகுதியில் உள்ள தனியாா் பால் பண்ணையில் வேலை செய்து வந்தாா். வழக்கம் போல கறவை மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தபோது, திடீரென மாடு மிரண்டு மொக்கையனைத் தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், மாடு கட்டுவதற்காக ஊன்றி வைத்திருந்த கம்பின் மீது விழுந்த மொக்கையன் பலத்த காயமடைந்தாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பயனின்றி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து மொக்கையனின் மகன் சிவமணி அளித்த புகாரின் மீது அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT