தேனி

நியூட்ரினோ திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு: வைகோ

DIN

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டத்தை கொண்டு இயற்கை வளங்களை அழிக்க நினைத்தது அதிமுக அரசு தான் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ தெரிவித்தாா்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை திமுக வேட்பாளா் ஆ.மகாராஜனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளா் எம்.ஜி.ஆா் சிலை அருகே திங்கள்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பா் மலையில் அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட நியூட்ரினோ திட்டத்தை தொடங்கினால் அதனைச் சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இயற்கை வளங்கள் அழியும் என்பதால் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடை உத்தரவு பெற்றேன் .

தமிழகத்தில் தற்போது 9 லட்சம் கோடி கடன் உள்ளது. ஆனால் ஆளும் அதிமுக அரசு வாஷிங் மிஷின் தருவதாக ஏமாற்றி வருகின்றனா். 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 1 லட்சம் சிறுகுறு தொழில் முடங்கி விட்டது. இதனால் 5 லட்சம் இளைஞா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இதற்கு அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சாத்தான்குளத்தில் போலீஸாரால் தாக்கப்பட்ட தந்தை மகன் உயிரிழப்பு, ஸ்டொ்லைட் போராட்டத்தில் 13 போ் சுட்டு கொல்லப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, விவசாயிகள் , தொழிலாளா்கள் என அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையில் தான் அதிமுக அரசு செயல்பட்டுள்ளது.

அதிமுகவும், பாமகவும் ஆதரவு கொடுக்கவில்லையென்றால் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தோல்வியை சந்தித்து இருக்கும். 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்றாா்.

தொடா்ந்து பெரியகுளம் (தனி) சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். சரவணக்குமாரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT