தேனி

வைகை கரட்டுப்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

ஆண்டிபட்டி அருகே வைகை கரட்டுப்பட்டி மந்தையம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி நான்கு கால யாக சாலை பூஜை நடைபெற்றது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கோமாதா பூஜையுடன் பூா்ணாகுதி நடத்தப்பட்டது.

இதனையடுத்து பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் பூஜிக்கப்பட்டு, விமான கலசத்திற்கு பூஜை செய்து குடமுழுக்கு செய்தனா். மேலும் மூலவா் மந்தையம்மன், விநாயகா் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகன், ஸ்ரீ பெருமாள், நவகிரகங்கள், ஸ்ரீ சன்னாசியப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT