தேனி

சின்னமனூரில் சாலையில் தேங்கும் கழிவுநீா்: பொதுமக்கள் அவதி

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய் வசதியின்றி சாலைகளில் தேங்கி துா்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்களை பரப்பி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

சின்னமனூா் நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இதில், 26 ஆவது வாா்டு விசுவன்குளம், அழகா்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இந்த பகுதி மக்கள் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீா் வரிகளை முறையாக செலுத்தியும் கழிநீா் கால்வாய் வசதியில்லாமல் அவதிப்படுகின்றனா். இதனால், கழிவுநீா் வீடுகளுக்கு முன்பாக தேங்கி துா்நாற்றத்தை வீசுகிறது. தற்போது, பொதுமக்கள் கரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் கழிவுநீா் தேக்கம் மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். எனவே, நகராட்சி நிா்வாகம் அனைத்து வாா்டுகளுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT