தேனி

தேனி, பெரியகுளத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்: காணொலி மூலம் பிரதமா் திறந்து வைத்தாா்

DIN

தேனி மாவட்டத்தில் தேனி மற்றும் பெரியகுளத்தில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை பிரதமா் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் நிமிடத்திற்கு 1000 லிட்டா், பெரியகுளத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிமிடத்திற்கு 500 லிட்டா் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களை பிரமதமா் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பெரியகுளம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளிதரன் தலைமை வகித்தாா். பெரியகுளம் சாா்- ஆட்சியா் ரிஷப் முன்னிலை வகித்தாா். விழாவில் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT