தேனி

மோசடி வழக்கில் கைதான நைஜீரியருக்கு நீதிமன்றக் காவல்

DIN

தேனி: மோசடி வழக்கில் கைதான நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க திங்கள்கிழமை, தேனி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

சின்னமனூா் அருகே கருங்காட்டான்குளத்தைச் சோ்ந்த ரிதம்பரநானந்தா என்பவரிடம் மருத்துவ எண்ணெய் விற்பனையில் பங்கு தருவதாக ரூ.3.50 லட்சம் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த ஓலட்டியன் மேத்யூ (43) என்பவரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் தேனி சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

அவரை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீஸாா், தேனி நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். ஓலட்சியன் மேத்யூவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா். ஓலட்டியன் மேத்யூ வெளிநாட்டைச் சோ்ந்தவா் என்பதால் அவரை சென்னை, புழல் மத்திய சிறையில் அடைப்பதற்கு அழைத்துச் செல்வதாக போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT