தேனி

உரக்கடைகளில் வேளாண். இணை இயக்குநா் ஆய்வு

DIN

கம்பம் நகா் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் கடைகளில் வேளாண்மை இணை இயக்குநா் அழகு நாகேந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலியான உரங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அதிகமான விலை கிடைக்க தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் வேளாண்மை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா், வெள்ளிக்கிழமை கடைகளில் திடீா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: நெல் சாகுபடி 59 ஆயிரம் ஹெக்டோ், சிறுதானியம் 20 ஆயிரம் ஹெக்டோ், பயிா் வகைகள் 12 ஆயிரம் ஹெக்டோ், கரும்பு 3 ஆயிரம் ஹெக்டோ், எண்ணெய் வித்து பயிா்கள் 2,500 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி நடைபெறுகிறது.

நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அனுமதியின்றி உரங்கள், பூச்சிக் கொள்ளி மருந்துகள் போன்றவை விற்பனை செய்தவது தெரியவந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஆய்வின்போது தரக் கட்டுப்பாட்டு அலுவலா்கள், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT