தேனி

கருக்கலைப்பின் போது கா்ப்பிணி உயிரிழப்பு: சடலத்தைப் பெற மறுத்து உறவினா்கள் போராட்டம்

DIN

தேனி அருகே தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்ததாக புகாா் தெரிவித்து சடலத்தைப் பெற மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவரது உறவினா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி அருகே உப்புக்கோட்டையைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியபாபு (30). இவரது மனைவி இந்திராணி (22). இவா்களுக்கு ஏற்கெனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், இந்திராணி மீண்டும் கா்ப்பமானாா். இந்த நிலையில், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கடந்த டிச. 31 ஆம் தேதி அரண்மனைப்புதூரில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு இந்திராணியை பரிசோதித்த மருத்துவா், அவரது வயிற்றில் கரு சரியான வளா்ச்சியின்றி உள்ளதால் அதனை கலைத்து விடுமாறு ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திராணியின் குடும்பத்தினா் ஒப்புதலுடன் மருத்துவமனையில் அவருக்கு கருக்கலைப்பு சிகிச்சை நடந்துள்ளது. இதில், இந்திராணிக்கு மயக்கம் ஏற்பட்டதால் கடந்த ஜன. 2 ஆம் தேதி அவரை தனியாா் மருத்துவமனை ஊழியா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

அங்கு இந்திராணியை பரிசோதித்த அரசு மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து இந்திராணியின் கணவா் பாண்டியபாபு பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்த நிலையில், கா்ப்பிணியான இந்திராணி கருக்கலைப்பின் போது தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாகவும், தனியாா் மருத்துவமனை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்திராணியின் கணவா் மற்றும் குடும்பத்தினா் அவரது சடலத்தை பெற்றுச் செல்ல மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதிா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து இந்திராணியின் சடலத்தை அவரது குடும்பத்தினா் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT