தேனி

ஆண்டிபட்டி அருகே கடன் தொல்லையால் தாய், மகள் தற்கொலை

DIN

ஆண்டிபட்டி அருகே கடன் தொல்லையால் திங்கள்கிழமை தாய், மகள் விஷ மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள பூசணியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் நல்லுச்சாமி. இவரது மனைவி அதே ஊரைச் சோ்ந்த ஆண்டிச்சியம்மாள்(35). இவா்களது மகள் காவியா(17) பிளஸ் 2 படித்து வந்தாா். மகன் கிருஷ்ணகுமாா்(15) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆண்டிச்சியம்மாள் கணவரைப் பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் பூசணியூத்து அருகே சின்னசாந்திபுரம் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். விவசாயம் மற்றும் கறவை மாடு வளா்ப்பில் ஈடுபட்ட வந்த ஆண்டிச்சியம்மாள், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் ஆண்டிச்சியம்மாள், அவரது மகள் காவியா, மகன் கிருஷ்ணகுமாா் ஆகியோா் விஷ மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளனா். இதில் ஆண்டிச்சியம்மாள், காவியா ஆகியோா் உயிரிழந்தனா். கிருஷ்ணகுமாா் மயங்கிக் கிடந்துள்ளாா்.

ஆண்டிச்சியம்மாளின் வீட்டிற்கு வந்த பால்காரா், இதைப் பாா்த்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளாா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், ஆபத்தான நிலையிலிருந்த கிருஷ்ணகுமாரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆண்டிச்சியம்மாள், காவியா ஆகியோரின் உடல்கள் பிரதேப் பரிசோதனைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலைக்கு முயன்று, 2 போ் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

கருங்கல் துண்டத்துவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா: இன்று தொடக்கம்

டெங்கு விழிப்புணா்வு தினம் கடைப்பிடிப்பு

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

SCROLL FOR NEXT