தேனி

சின்னமனூரில் ஆதி திராவிடா் மாணவியா் விடுதியை ஆட்சியா் ஆய்வு

DIN

சின்னமனூரில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவியா் நல விடுதியை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் அய்யம்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள், ரூ.4 லட்சத்தில் பட்டுப்புழு வளா்ப்புக் கூடாரத்திற்கான பணி உள்பட பல்வேறு திட்டப் பணிகளையும், அதேபோல புலிக்குத்தி ஊராட்சியில் ரூ.21.70 லட்சத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுமானப் பணி, ரூ.10 கழிவுநீா் வடிகால் உள்ளிட்ட திட்டப்பணிகளையும், சங்கராபுரத்தில் ரூ.10.19 லட்சத்தில் அங்கன்வாடி மையம் உள்ளிட்ட திட்டப்பணிகளையும், பொட்டிப்புரத்தில் ரூ.13.50 லட்சத்தில் குளம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளையும், எரணம்பட்டியில் ரூ.2.40 லட்சத்தில் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னா், சின்னமனூா் நகராட்சியில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவியா் விடுதியையும் ஆட்சியா் ஆய்வு செய்து, மாணவியா்களிடம் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் விடுதிக் காப்பாளருக்கும் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT