தேனி

ராட்டினத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பலியான விவகாரம்: 4 போ் மீது வழக்கு

DIN

தேனி: வீரபாண்டியில் ராட்டினம் சீரமைப்புப் பணியிலிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவகாரத்தில், ராட்டின உரிமையாளா், ஒப்பந்ததாரா்கள் என 4 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்காக ராட்டினத்தை சீரமைத்துக் கொண்டிருந்த உப்பாா்பட்டியைச் சோ்ந்த முத்துக்குமாா் (32) என்பவா், ராட்டினம் அருகே இருந்த உயா் கோபுர மின்விளக்குக் கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இச்சம்பவத்தில் போதிய பாதுகாப்பு உபரணங்களை பயன்படுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக, ராட்டின உரிமையாளா் வாணியம்பாடியைச் சோ்ந்த மோகன், ராட்டினத் திடல் ஒப்பந்ததாரா்களான வீரபாண்டியைச் சோ்ந்த தங்கதுரை, தேனியைச் சோ்ந்த குணசேகரன், வயல்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் ஆகியோா் மீது, வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT