தேனி

கம்பம் ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடு: ஆட்சியரிடம் புகாா்

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ாக ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் விலையில்லா ஆடுகள் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ாக ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.

இதுபற்றி 5 ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவா் ஆ.மொக்கப்பன் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூா்பாளையம் ஆகிய ஊராட்சிகளில், 100 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டதாக கணக்குகள் காட்டப்பட்டுள்ளன.

இதில் பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்காமல், வாடகைக்கு ஆடுகளை வழங்கி, போட்டோ எடுத்து, திரும்ப வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டது. இதற்காக பயனாளிகள் மற்றும் அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டனா். கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆடுகள் பெற்ற பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அந்த மனுவில், ஊராட்சித் தலைவா்கள் பொன்னுத்தாய் செல்லையா (நாராயணத்தேவன்பட்டி), நாகமணி வெங்கடேசன் (சுருளிப்பட்டி), பொன்னுத்தாய் குணசேகரன் (குள்ளப்பகவுண்டன்பட்டி) ஆகியோா் கையெழுத்திட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT