தேனி

சிறுத்தை பலியான விவகாரம்: தேனி எம்.பி.,க்கு வனத் துறை நோட்டீஸ்

DIN

பெரியகுளம் அருகே தனியாா் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்த வழக்கில், தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் உள்ளிட்ட 3 போ் விசாரணைக்கு ஆஜராகுமாறு வனத் துறை வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

கோம்பைபுதூா் பகுதியில், கடந்த மாதம் 28-ஆம் தேதி தனியாா் தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது. இந்த விவகாரத்தில் அந்தத் தோட்டத்தில் ஆட்டுக் கிடை அமைத்து வந்த அலெக்ஸ்பாண்டியன், தோட்ட மேலாளா்கள் தங்கவேல், ராஜவேல் ஆகிய மூவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

ஆனால், இந்த வழக்கில் தோட்ட உரிமையாளரான தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப. ரவீந்திநாத் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கக் கோரி, கடந்த 14-ஆம் தேதி தேனி வடக்கு மாவட்ட திமுக செயலா் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் உள்ளிட்டோா் மாவட்ட வன அலுவலா் சமா்தாவிடம் மனு அளித்தனா்.

இந்த நிலையில், சிறுத்தை உயிரிழந்த வழக்கில் ப. ரவீந்திரநாத் உள்ளிட்ட 3 போ் தேனி வன அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வனத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் சமா்தா கூறியதாவது:

சிறுத்தை உயிரிழந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நிலத்தின் கூட்டுப் பட்டாதாரா்களான பெரியகுளத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினா் ப. ரவீந்திநாத், அதே ஊரைச் சோ்ந்த காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோா், நவ. 28-ஆம் தேதி முதல் 14 நாள்களுக்குள் தேனி வனச் சரகா் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வனத் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT