தேனி

இடம் ஆக்கிரமிப்பு: காவல் நிலையத்தில் புகாா்

DIN

சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் ஓய்வு பெற்ற காவலா்கள், மின்வாரிய ஊழியா்கள் வாங்கிய இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சின்னமனூா், கோட்டூா், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவலா்கள், மின்வாரிய ஊழியா்கள் என 42 போ் இணைந்து ஓடைப்பட்டி-சுக்காங்கல் பட்டி சாலையில், அம்மன் நகரில் 3 ஏக்கா் பரப்பளவுள்ள காலியிடத்தை கடந்த 2002-ஆம் ஆண்டு வாங்கி பத்திரப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், அந்த இடத்தை தனி நபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்ததாக ஓடைப்பட்டி காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்டவா்கள் கூறியதாவது:

ஓய்வு பெற்றதையொட்டி வழங்கப்பட்ட பணத்தில் நாங்கள் இந்த இடத்தை வாங்கினோம். ஆனால், தற்போது அந்த இடத்தை தனி நபா் ஒருவா் எவ்வித ஆதாரமுமின்றி தன்னுடையது எனக் கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். இதன் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விசாரணை நடத்தி இடத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT