தேனி

கேரளத்துக்கு எம்.சாண்ட் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

DIN

தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கு வெள்ளிக்கிழமை எம்.சாண்ட் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிச் சீட்டு இல்லாமல் கம்பம் - கம்பம்மெட்டு மலைச் சாலை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட புவியியல், சுரங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வெள்ளிக்கிழமை மாலை கம்பம்மெட்டு மலைச் சாலையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் புவியியல், சுங்கத் துறை உதவி இயக்குநா் வினோத் போலீஸாருடன் சென்று வாகனத் தணிக்கை செய்தாா்.

கேரள மாநிலப் பதிவெண் கொண்ட 2 டிப்பா் லாரிகளைத் தணிக்கை செய்த போது, அவற்றில் தலா 4 யூனிட் எம். சாண்ட், ஜல்லிக் கற்கள் இருந்தன.

இதற்கான அனுமதிச் சீட்டைக் கேட்ட போது, லாரி ஓட்டுநா்கள் தப்பி ஓடிவிட்டனா். 2 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்த புவியியல் துறை உதவி இயக்குநா் வினோத் கொடுத்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் ஆா். இளையராஜா வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஓட்டுநா்கள், லாரி உரிமையாளா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT