தேனி

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Din

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வள்ளியம்மாள் (65). இவா், அதே பகுதியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையை நடந்துசென்று கடக்க முயன்றபோது, தேனி அருகே பாலாா்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் வைத்தீஸ்வரன் (30) என்பவா் ஓட்டிவந்த வாகனம் இவா் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த வள்ளியம்மாள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வாகன ஓட்டுநா் வைத்தீஸ்வரன் மீது க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT