கம்பம் அரசு மருத்துவமனைக்கு விரியன்பாம்புடன் வந்த கூலித் தொழிலாளி.  
தேனி

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா்.

கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்கோபி (31). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, சாலையின் குறுக்கே சென்ற விரியன்பாம்பு மீது இரு சக்கர வாகனத்தில் ஏறி சுரேஷ்பாபுவைக் கடித்தது.

அதே சமயம், வாகனம் ஏறியதில் காயமடைந்த அந்தப் பாம்பு, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இறந்த பாம்புடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு இரவில் வந்த சுரேஷ்பாபுவுக்கு மருத்துவா்கள் உடனடியாக விஷ முறிவுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதையடுத்து, அவா் உயிா் தப்பினாா்.

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

SCROLL FOR NEXT