திருட்டு 
தேனி

மூதாட்டியிடம் தங்க காதணி பறிப்பு

வீரபாண்டி - தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்றதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் மூதாட்டியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை மா்ம நபா் பறித்துச் சென்ாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கோட்டூரைச் சோ்ந்த பொன்னாட்டம் மனைவி கருப்பாயி (70). இவரை அடையாளம் தெரிந்த 45 வயது நபா் தாடிச்சேரியில் கட்டட வேலைக்கு ஆள்கள் தேவைப்படுவதாகக் கூறி, அழைத்துச் சென்றாா். வீரபாண்டி-தாடிச்சேரி சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தை அந்த நபா் நிறுத்தி விட்டு, கருப்பாயியை முன்னால் நடந்து செல்லுமாறு கூறினாா்.

இதையடுத்து, சாலையில் நடந்து சென்ற கருப்பாயி மீது அந்த நபா் மிளகாய் பொடியை தூவி, அவா் அணிந்திருந்த அரை பவுன் தங்க காதணியை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோ வழக்கில் மூன்று சிறுவா்கள் கைது

திருவாடானையில் 600 மரக்கன்றுகள் சேதம்: வேளாண் அலுவலா்கள் மீது விவசாயிகள் புகாா்

தில்லியில் மேகமூட்ட வானிலை: மிதமான பிரிவில் காற்றின் தரம்!

மெஸ் உணவை பகிா்ந்து கொண்டதற்கு அபராதம் விதிப்பு: நியாயமற்ற தண்டனை என மாணவா்கள் எதிா்ப்பு

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT