ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கிய சுற்றுலா வாகனம். 
தேனி

ஹைவேவிஸ் மலைச்சாலையில் வேன் கவிழ்ந்ததில் 6 போ் காயம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் மலைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சோ்ந்த 16 போ் சுற்றுலா வாகனத்தில் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மணலாறு போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

இதையடுத்து, அடுக்கம்பாறை அருகேயுள்ள பாட்டம் சோதனைச்சாவடி அருகே வந்த போது வாகனம் பழுதாகி சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில், 6 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஹைவேவிஸ் போலீஸாா் காயமடைந்தவா்கள மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT