FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

3 ஜூலை 2026, 11:40 pm IST
பகிர்:

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் நகராட்சி அலுவலகத்திலும் தேனி ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். சோதனை காரணமாக நகராட்சி ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலகத்திலேயே இருந்தனா். நகராட்சி அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு சோதனை நடைபெற்றது.

Advertisement

Advertisement

கடந்த மாதம் 4-ஆம் தேதி போடி சாா்பதிவாளா் அலுவலகத்திலும் இதேபோல் சோதனை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments