: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் விடுதிகளில், மாணவர்களுக்கு என்று 27 விடுதிகளும், மாணவிகளுக்கு என்று 20 விடுதிகளும் மொத்தம் 47 விடுதிகள் உள்ளன.
இங்கு, பல ஆண்டுகளாக காப்பாளர்கள், சமையலர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளன. 47 சமையலர்களுக்கு 42 பணியிடங்கள் காலியாக உள்ளன. 47 காப்பாளர்களில், 12 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுபோக, அனுமதிக்கப்பட்ட விடுதிகளில், 13 காவலர்கள் பணியிடங்கள், 3 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வர் உத்தரவின்படி, காப்பாளர், சமையலர், காப்பாளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. தேர்வு நடந்து 2 மாதங்களுக்கு மேலாகியும், யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை. வேலைப் பளு காரணமாக, குறித்த நேரத்தில், மாணவர்களுக்கு உணவு வழங்க, தாமதம் ஏற்படுகிறது.
ஒரே சமையலர் பணியாற்றி வருவதால், விடுமுறை மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் அவர்கள் விடுமுறை எடுக்க முடிவதில்லை. 10 ஆண்டுகளாக காலிபணியிடங்கள் நிரப்பப்படாததால், 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், வேலைப் பளு காரணமாக வி.ஆர்.எஸ். கொடுத்து சென்று விட்டனர். மேலும், பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கல்வி விடுதி பணியாளர்கள் நலச் சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறுகையில், மாணவர்களின் நலன்கருதி, விடுதிகளில் காலி பணியிடங்களை நிரப்ப, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.