விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வி.வி.வி. நகரிலுள்ள நாகம்மாள் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 48 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் துவங்கியது.
50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து அம்மனுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 500 பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடைபெற்றது. சிவனடியார் முத்துசாமி, குழுவினரின் ஆன்மீக சொற்பொழிவு, மதுரைகண்ணன், பாடகர் சௌந்திரபாண்டி குழுவினரின் இன்னிசைக் கச்சேரி, நாடகம், வில்லுப்பாட்டு, கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன.
ஏராளமான பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். திருவிழாவில் நடைபெற்ற அன்னதானத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.