விருதுநகர்

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகை

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, ஆதித்தனேந்தல், என்.பள்ளபட்டி, சேதுராயனேந்தல், நெடுகனேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, ஆதித்தனேந்தல், என்.பள்ளபட்டி, சேதுராயனேந்தல், நெடுகனேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.

   300 ஏக்கரில் விவசாயம் செய்ததில், 50 ஏக்கருக்கும் குறைவாகவே வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பெயர்கள், பட்டியலில் இல்லை.

  இதனால் கிராம விவசாயிகள், நரிக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜூவிடம் புகார் தெரிவித்தனர்.

   திருச்சுழி வட்டாட்சியர் புருஷோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT