ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல்
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல் முதல்வர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் ஐ.டி.ஐ.யில் வளாக நேர்காணல் முதல்வர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
புணேயில் உள்ள ஜான்சன் லிப்ட் நிறுவனத்தின் மேலாளர் பாலசிங், ஸ்ரீகாந்த் மற்றும் பொன் அய்யப்பன் ஆகியோர் வளாக நேர்காணலை நடத்தினர்.
இதில் எலக்ட்ரிசியன், லிப்ட் மெக்கானிக் மற்றும் வயர்மேன் பிரிவு மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தேர்வுகளுக்குப் பின்னர் இறுதியாக 26 மாணவர்கள் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டன. வளாக நேர்காணலில் வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்வி நிறுவனத் தலைவர் தி. கலசலிங்கம், செயலர் க. ஸ்ரீதரன், கலசலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் வெ. வாசுதேவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
Advertisement
Advertisement