விருதுநகர்

திருச்சுழியில் அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடந்தது. திருச்சுழி தொகுதிச் செயலர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் மோகன், சென்னிலைகுடி ஊராட்சி மன்றத் தலைவர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் ராஜேந்திரன் வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் மோகன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் குருசாமி, கவுன்சிலர்கள் மகாமூர்த்தி, சொக்கர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றியக் கவுன்சிலர் கமலபாஸ்கரன் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை திருச்சுழி ஒன்றியச் செயலர் முத்துராமலிங்கம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT