விருதுநகர்

குண்டாறில் தடுப்பணை கட்ட கோரிக்கை

காரியாபட்டி அருகே குண்டாறில் தடுப்பணை இல்லாததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் கண்மாய்கள் நிரம்பாத நிலை நீடிக்கிறது.

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே குண்டாறில் தடுப்பணை இல்லாததால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும் கண்மாய்கள் நிரம்பாத நிலை நீடிக்கிறது.

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.

30 ஆண்டுகளுக்கு முன் மழைக்காலத்தில் கிராமத்தின் மேற்கு பகுதியில் உள்ள குண்டாற்றின் குறுக்கே மண் சாக்குகளால் தடுப்பணை கட்டி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டுவந்து இருபோக சாகுபடி நடந்தது.

வக்கணாங்குண்டு கண்மாய் நிறைந்து கழுவனச்சேரி, சித்துமூன்றடைப்பு, அல்லிக்குளம், ஆத்திகுளம் கண்மாய்கள் நிறைந்து அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் மீண்டும் குண்டாற்றில் கலந்து விடும்.

காலப்போக்கில் மழை குறைந்ததால், வக்கணாங்குண்டு கண்மாய்க்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பிசிண்டி அருகில் குண்டாற்றின் நடுவே தடுப்பு அணை கட்ட கிராம மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இதற்கிடையே நான்கு வழிச்சாலை அமைக்க வக்கணாங்குண்டு கண்மாயில் பொதுப்பணித்துறையால் மண் எடுக்கப்பட்டது.

சமமாக மண் எடுக்காததால், கண்மாய் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

ஆற்றில் இருந்து வரும் வரத்துக்கால்வாய் முள் புதர்களால் மூடப்பட்டு விட்டது. விவசாயத்தை நம்பி இருந்த 2 ஆயிரம் குடும்பங்களில் ஏராளமானோர் பிழைப்புதேடி வெளியூர் சென்று விட்டனர்.

எனவே, வக்கணாங்குண்டு மக்களின் 30 ஆண்டு கோரிக்கையான குண்டாற்றில் தடுப்பு அணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT