விருதுநகர்

சாத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலைத் துறை சுணக்கம்

DIN

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருப்பினும், நெடுஞ்சாலைத் துறையினர் சுணங்குவதால், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
      விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியிலுள்ள மதுரை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் கோயில்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களும் உள்ளன. இந்த பகுதியில்அதிகளவில் சிறு மற்றும் பெரிய அளவில் கடைகள் நடைபாதை முதல் பிரதான சாலை வரை விரிவாக்கம் செய்யபட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பெயரளவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. அதையடுத்து, அதே பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து விட்டன. இதனால், இப்பகுதி மக்களும், வாகன ஒட்டுநர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
    கடந்த மாதம் 21 ஆம் தேதி, சாத்தூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டிசம்பர் 12, 13 தேதிகளில் நெடுஞ்சாலைத் துறை மற்றும் நகராட்சி இணைந்து, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
   அதன்படி, இரண்டு துறை சார்பிலும் நகர் பகுதியில் தண்டோரா மற்றும் நோட்டீஸ் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு காவல் துறை, மின்துறை, வருவாய்த் துறைக்கு எவ்வித அறிவிப்பும் நெடுஞ்சாலைத் துறை செய்யவில்லையாம். இதனால், பிற துறைகளுக்கும் முறையான அறிவிப்பு செய்தால் மட்டுமே, முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும் எனக் கூறப்படுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கேள்விக்குறியாகி உள்ளது. 
    பொதுமக்கள் நலன் கருதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்துத் துறைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT