விருதுநகர்

"காமராஜர் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமானவர்'

DIN

காமராஜர் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமானவர் என விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி திருவிழாவில் கேகேஎஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:  பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததால் தான் விருதுநகருக்கு பெருமை.  நாடார் சமுதாயத்திற்கு மட்டும் அவர் சொந்தமானவர் கிடையாது. சுதந்திர போபாட்டத்தின் போது தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காமராஜர்,  ரெட்டியார்,  நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வீடுகளில் தங்கி இருந்தார். மேலும்,  பிற ஜாதி,  மதத்தினருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.  அதனால், அவர் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமானவர். எங்களுக்கும் அவரது ஆசி வேண்டும் என்பதற்காகவே நாங்களும் இந்த விழாவில் கலந்து கொள்கிறோம்.   அவர் காட்டிய வழியில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், "சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு (திருச்சுழி), சீனிவாசன் (விருதுநகர்), தங்க பாண்டியன் (விருதுநகர்), பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி) அனிதாராதாகிருஷ்ணன் முதலானோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூர்,  ஸ்ரீசூளை விநாயகர் வித்யாலயாவில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு பள்ளி செயாளர் எஸ்.சேதுராமன் தலைமை வகித்தார். முதல்வர் மகாலட்சுமி வரவேற்றார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் பி.ஜெகநாதன், காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உரையாற்றினார்.
மாணவ மாணவியர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.முத்துராமலிங்ககுமார் பரிசுகளை வழங்கினார். விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
தொடக்கக் கல்வித் துறை சார்பில் காமராஜரின் பிறந்தநாளையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது. நகர்மன்ற திரு.வி.க. தொடக்கப் பள்ளி மைதானத்தில் ஏராளமான மாணவ மாணவியர் மற்றும் காமராஜர் வேடமணிந்த 115 மாணவர்கள் கலந்து கொண்ட கல்வி விழிப்புணர்வை வழியுறுத்தும் பேரணி தொடங்கியது. பேரணியை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். பேரணி ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலையை அடைந்துது. அங்கு கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் காமராஜரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் பேரணி மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை அடைந்தது. அங்கு காமராஜரின் நினைவைப் போற்றும் வகையில் 115 காமராஜர் வேடமணிந்த மாணவர்களும், 115 என்ற எண்ணாக நின்று, அனைவரும் கல்வி கற்க உதவியாக இருப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கி.சீனிவாசன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT