ராஜபாளையம் கல்லூரியில் கபடி பயிற்சி முகாம்
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம்
ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், விருதுநகர் மாவட்ட கபடி அமெச்சூர் கழகமும் இணைந்து நடத்தும் மாவட்ட கபடி சிறப்பு பயிற்சி முகாம் ராஜுக்கள் கல்லூரியில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மே மாதம் 5 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 21 வயதிற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைசிறந்த கபடி வீரர்கள் முன்னிலையில் பயிற்சி வழங்குகின்றனர். இப்பயிற்சி முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம் என்று விருதுநகர் கபடி அமெச்சூர் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர்கள் கல்லூரி விளையாட்டுத்துறைதொடர்பு கொள்ளலாம்.