விருதுநகர்

கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய உற்பத்தித் திறன் வார விழா

DIN

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தேசிய  உற்பத்தித் திறன்  வார விழா, "தொழில்துறை கைத்தொழில் 4.0' என்ற தலைப்பில் திங்கள்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
விழாவுக்கு துணைவேந்தர் எஸ்.சரவணசங்கர்  தலைமை வகித்தார். அரசுப் பொதுத்தேர்வு பயிற்சி மைய இயக்குநர் ஆர்.திருவேங்கடசுவாமி வரவேற்றார். மதுரை தேசிய உற்பத்தி திறன் குழுத் தலைவர் ஆர்.எஸ்.சேதுபதி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். கல்பாக்கம் அணுமின்நிலைய இயக்குநர் ஆலுதாஸ் கந்தையா சிறப்பு  விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். சென்னை என்.ஐ. க்யூ.ஆர். செயலர் கவுரிசங்கர் சிறப்புரையாற்றினார். மதுரை உற்பத்தித் திறன் குழு உறுப்பினர் ஜி.சுப்பிரமணியன்,  பல்கலைக் கழக இ.சி.இ. பேராசிரியர் கிங் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  
பாலிடெக்னிக்  மாணவர்கள், கல்லூரி,  பல்கலைக் கழக  மாணவர்கள் ஏராளமானோர் தங்கள் ஆசிரியர்களுடன்  வந்திருந்து கட்டுரைகளை  சமர்ப்பித்து பேசினர். அனைவருக்கும் சான்றிதழ்களையும்  முதல் மூன்று இடங்களைப் பெற்ற  மாணவர்களுக்கு  பரிசுகளையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT