முகப்பு
விருதுநகர்

இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் 

ராஜபாளையத்தில் இரட்டை மலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 9 ஜூலை, 2018 at 6:55 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ராஜபாளையத்தில் இரட்டை மலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்தநாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆதிதிராவிடர் உறவின் முறைத் தலைவர் கதிர்வேல் தலைமையில் இச்சமுதாய பெரியோர்கள் ராஜபாளையம் சர்ச் தெருவில் சமுதாயக் கூடத்தில் இரட்டை மலை சீனிவாசன் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் சமுதாய நாட்டாமை கனகராஜ், பொருளாளர் லூர்க்காஸ் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.