மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை வட்டம் பாளையம்பட்டியில் சேதமடைந்துள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையம்பட்டி கிராமத்தின் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தை அடுத்துள்ள பெரிய கண்மாயின் கரை மீது பல ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பயன்பாட்டிற்கு வந்து ஓராண்டு முடிவதற்குள்ளாகவே மின்மோட்டார் பழுது ஏற்பட்டு பல மாத இடைவெளிக்குப்பிறகு சீரமைக்கப்பட்டது.
ஆனால் உரிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என்பதால் போதிய பராமரிப்பு இன்றி சுகாதார வளாகம் பயன்பாடற்றுப் போனது. இதனால் இப்பகுதி பெண்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மகளிர் சுகாதார வளாகத்தைச் சீர்செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், ஆண்களுக்கும் தனியாக புதிய சுகாதார வளாகம் அமைத்துத்தரவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.