தனிநபர் கழிப்பறை: ஆலோசனைக் கூட்டம்
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பகுதியில் தனிநபர் கழிப்பறைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது
சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியப் பகுதியில் தனிநபர் கழிப்பறைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, திட்ட மண்டல அலுவலர் மணிக்கவாசகம் தலைமை வகித்தார். ஆணையர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கலட்சுமி, ஒன்றியப் பொறியாளர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தக்கூடாது எனவும், வீட்டுக்கு ஒரு தனிநபர்கழிப்பறை அவசியம் எனவும், தனிநபர் கழிப்பறை அமைக்க அரசு மானியம் ரூ. 12 ஆயிரம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதில், கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நூறு சதவீதம் தனிநபர் கழிப்பறை அமைப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.