விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே குடிநீர் தட்டுப்பாடு: புதர் மண்டிய கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை

DIN

அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரம் கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ள தெப்பக்குளத்தின் மழைநீர் வரத்துக்கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
   கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாதாததால் தெப்பக்குளத்தின் மழைநீர் வரத்துக் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு புதர்ச் செடிகள் வளர்ந்துவிட்டன. இதனால் தெப்பகுளத்திற்கு மழைநீர் வரத்துகுறைந்து ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் வறண்டு காணப்படுகிறது.  இதனால் இதே சாலையில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளும் வறண்டுபோயின. 
இரண்டிலுமே மிகக்குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது. ஆழ்துளைக்கிணற்று நீரைத்தான் இப்பகுதி மக்கள் குடிநீராகவும் வீட்டுப்புழக்க நீராகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் அதிக விலைகொடுத்து குடிநீர் மட்டுமல்லாது வீட்டுப்புழக்க நீரையும் வாங்கும் அவலநிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தெப்பக்குளத்தின் மழைநீர்வடிகாலை சீரமைக்க கிராம மக்கள் ஊராட்சித் தரப்பிடம் பலமுறை மனுச்செய்தும் உரிய பலனில்லையென கூறப்படுகிறது. 
இரண்டு ஆண்டுகளாகியும் 
இதே நிலை நீடிப்பதால் நீர்வரத்தின்றி பொதுமக்கள்கவலைப்
படுகின்றனர்.
ஆகவே விரைந்து உரிய நடவடிக்கை எடுத்து தெப்பக்குளத்தின் மழைநீர் வரத்துக்கால்வாயை விரைவில் சீரமைக்கவேண்டும் எனமாவட்ட நிர்வாகத்திற்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT