விருதுநகர்

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார்கள் இயக்கம்

DIN

விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய பேட்டரி கார் சேவையை மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார். 
அப்போது அவர் கூறியதாவது,  விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலிருந்து இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 11 அரசு மருத்துவமனைகளும், 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன. 
இந்நிலையில், விருதுநகர் அரசு மருத்துவமனையில் நடக்க முடியாத நோயாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 2 பேட்டரி கார்கள் (மின்மாற்றி வாகனம்) இயக்கப்படுகிறது. 
இந்த இரண்டு பேட்டரி வாகனம், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் தொடங்கி ஸ்கேன் மையம், சீட்டு பதியும் இடம், வெளி நோயாளிகள் பிரிவு, எக்ஸ்ரே மற்றும் சி.டி ஸ்கேன் மையம், ஆய்வகம், ரத்தவங்கி, அவசர சிகிச்சைபிரிவு ஆகிய இடங்களுக்கு நோயாளிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைக்கேற்ப தினசரி இயக்கப்படும். 
இதில் ஒரு பேட்டரி கார், 6 நபர்கள் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும், சுமாரர்200 கிலோ அளவிலான பொருள்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மற்றொரு பேட்டரி காரானது நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய வகையிலும், நோயாளிகளை படுக்க வைத்து கொண்டு செல்லும் வசதியுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி கார்களை, ஒருமுறை நான்கு மணிநேரம் பேட்டரி ஜார்ஜ் செய்தால் சுமார் 70 கி.மீ வரை இயக்கமுடியும் என்றார் அவர். 
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(மருத்துவபணிகள்) மனோகரன், துணை இயக்குநர் (கனிம வளம்) ஆறுமுக நயினார், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் பிரகலாதன், நிலைய மருத்துவ அலுவலர் முருகேசன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT