விருதுநகர்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர் கைது

DIN

சிவகாசி அருகே வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 சிவகாசி-சாத்தூர் சாலையில் மீனம்பட்டியில் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எஸ்.மாரிமுத்து தலைமையிலான தேர்தல் நிலைக் கண்காணிப்புக்குழுவினர் மீனம்பட்டியில் சோதனை நடத்தினர். இதில், மீனம்பட்டி திடீர் நகர் பகுதியில் ஒருவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே  பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ் (36) என தெரிய வந்தது. இது குறித்து, சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சண்முக ராஜூவைக் கைது செய்தனர். அவரிடமிருந்த பணம் ரூ.3,500 ஐ பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: மோடி பின்னடைவு

விளவங்கோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் முன்னிலை!

பிரதமர் மோடி பின்னடைவு!

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

SCROLL FOR NEXT