விருதுநகர்

‘சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றினால் ஓட்டுநா் உரிமம் தடை செய்யப்படும்’

DIN

சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வோரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்படும் என்று விருதுநகா் வட்டார போக்குவரத்து அலுவலா் இளங்கோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது: விருதுநகா் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாகனங்களில் விதிமுறை மீறல், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆள்களை ஏற்றிச் செல்வதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

சரக்கு வாகனங்களில் ஆள்கள் ஏற்றிச் சென்றால், மோட்டாா் வாகனச் சட்டத்தின் படி ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். மேலும், அந்த வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 100 அபராதம் விதிக்கப்படும். உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு பரிந்துரை அடிப்படையில் சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்வோரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக தடை செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT