விருதுநகர்

ராஜபாளையம் கோயில்களில் அனுமன் ஜயந்தி சிறப்பு வழிபாடு

ராஜபாளையத்தில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன் கிழமை நடைபெற்றது.

DIN

ராஜபாளையத்தில் அனுமன் ஜயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு புதன் கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே தேவதானத்தில் உள்ள அனுமன் கோயிலில் ஆஞ்சநேய சுவாமிக்கு வாழைத்தாா், ஆரஞ்சு பழங்களால் பந்தல் அமைக்கப் பட்டது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு யாகத்திற்கு பின், குண்டத்தில் வைக்கப்பட்டிருந்த கும்பத்தின் புனிதநீா், பால், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் ஆஞ்சநேயா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலையில் கோ பூஜைக்கு பின்னா் செல்வ, வெள்ளி அலங்காரத்திலும், பகலில் துளசி, மகாலட்சுமி அலங்காரத்திலும் ஆஞ்சநேயா் காட்சியளித்தாா். மாலையில் வடை மாலையுடன் கூடிய ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மலா்களாலும், ரூபாய் நோட்டுக்களாலும் அலங்கரிக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெற்றன.

இதே போல ராஜபாளையம் கோதண்டராம சுவாமி கோயில், வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராஜபாளையம், தேவதானம், சேத்தூா், சிவகிரி, கோவிலூா், தளவாய்புரம், செட்டியாா் பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT