விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் தர்னா

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம், அச்சம்தவிர்த்தான் ஊராட்சி, வடக்கு அச்சம்தவிர்த்தான் கிராமத்திற்கு தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அலுவலர்களுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனையடுத்து ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊர் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு  தர்னா போராட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் பொறியாளர்கள் பாலகிருஷ்ணன், மாடசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
   இதில் கிராமத் தலைவர்கள் சின்னதுரை, கருத்தபாண்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  இதில் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

SCROLL FOR NEXT