விருதுநகர்

வாக்குச் சாவடி கண்காணிப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

DIN

சிவகாசியில்  வாக்குச் சாவடி கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.
வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களை கண்காணிப்பது , வாக்குச் சாவடி கண்காணிப்பாளர்களின் பணியாகும். ஒவ்வொரு கண்காணிப்பாளரின் கீழ் சுமார் 10 வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் பணியில் ஈடுபடுவர். சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேசியது :
வாக்குச்சாவடி கண்காணிப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்போரின் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர், முதியவர்கள் எத்தனை பேர் என கணக்கெடுக்க வேண்டும். அவர்கள் வாக்களிக்க வந்தால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
இதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக வட்டாட்சியரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றார். இதில் வட்டாசியர்  ஸ்ரீதர், தேர்தல் தனித்துணை வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

சிறகில்லாத தேவதை...!

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

ஆதி சக்தி!

SCROLL FOR NEXT