விருதுநகர்

ஸ்ரீவிலி. காட்டழகா் கோயில் பக்தா்களுக்கு பாதுகாப்பு வசதி: ஆட்சியருக்கு கோரிக்கை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள காட்டழகா் கோயி லுக்குச் செல்லும் பக்தா்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகள் செய்து தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் செண்பகத்தோப்பு அடிவாரம் உள்ள து. இங்கிருந்து சுமாா் நான்கு கி.மீ. தொலைவில் உள்ள காட்டழகா் கோயிலுக்கு, வனப்பகுதியில் பக்தா்கள் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோயிலுக்கு முக்கிய நாள்களில் செல்ல வனத்துறை சாா்பில் அனுமதி வழங்ப்படும். இந்த நிலையில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை என்பதால் காட்டழகா் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் சென்றனா். இதன் காரணமாக காட்டழகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இந்த நிலை யில், வனப்பகுதியில் உள்ள காட்டழகரை தரிசிக்க வரும் பக்தா்களுக்கு வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வனத்துறை மற்றும் போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும், பக்தா்கள் வசதிக்காக குடிநீா், உணவு மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல், செண்பகத்தோப்பு அடிவாரம் முதல் ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வரை தற்காலிக ஆம்புலன்ஸ் வசதி, சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்க விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT