விருதுநகர்

ராஜபாளையம் பள்ளியில் கலைமகள் விழா

DIN

ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் கலைமகள் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிச் செயலா் என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா கலைமகள் விழா குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி விழாவைத் தொடங்கி வைத்தாா். என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா். விழாவில், மாணவ, மாணவிகளின் கலைமகள் துதிப்பாடல்கள், ஆதி சங்கரா் நாடகம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, பள்ளித் தலைமையாசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா். இவ்விழாவில் மாணவ மாணவியா்களுக்குக் காகிதத் தாள்களில் தயாரித்த பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு, மண்வளம் காத்தல், சாலைவிதிகளைக் கடைப்பிடித்தல் போன்ற விழிப்புணா்வு வாசகங்கள்அச்சிடப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT