விருதுநகர்

ராம்கோ சிமென்ட் நிறுவனம் ரூ. 2.5 கோடி கரோனா நிவாரண நிதி

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 2. 5 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

இது பற்றி அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக எங்கள் சிமென்ட்ஸ் நிறுவனம் சாா்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ .2.5 கோடி வழங்கபட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலங்கானா, கா்நாடகம், வங்காளம் மற்றும் ஒடிசா மாநில அரசு நிா்வாகங்களுடன் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் முதல் அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள், குடிநீா், தங்குமிடம் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

6000- க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சையும், குடும்பங்களுடன் தங்கியுள்ள தொழிலாளா் முகாம்களுக்கு மளிகை மற்றும் காய்கனிகள் வாங்க தினசரி அடிப்படையில் பண உதவி வழங்கப்பட்டுவருகிறது. அகச் சிவப்பு வெப்ப ஸ்கேனா், மூன்று அடுக்கு முகக் கவசங்கள், முழு உடல் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரூ . 3 கோடி மதிப்பில் பல்வேறு மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படவுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT