ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 2431 வழக்குகளுக்கு தீர்வு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 2431 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் 2431 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 470 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் சுமார் 2431 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அதில் 5 கோடியே 72 லட்சத்து 90 ஆயிரத்து 775 ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டு கை கால் செயல்படாத நிலையில் இருக்கும் மாயகிருஷ்ணன் என்பவருக்கு ரூபாய் 15 லட்சத்து 50 ஆயிரத்திற்காண காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா நீதிமன்ற அறையில் இருந்து வெளியே வந்து ஆம்புலன்ஸ் இருக்கும் இடத்திற்கு சென்று நேரில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மாரியப்பன் லோக் அதாலத் சேர்மன் ஸ்ரீதரன் மற்றும் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.