ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம்: அா்ஜூன் சம்பத்
ரஜினி தலைமையில் அவரது ஆன்மிக அரசியலை ஏற்று கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம் என, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளாா்.
விருதுநகர்ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம்: அா்ஜூன் சம்பத்
ரஜினி தலைமையில் அவரது ஆன்மிக அரசியலை ஏற்று கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம் என, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளாா்.
ரஜினி தலைமையில் அவரது ஆன்மிக அரசியலை ஏற்று கமல்ஹாசன் வந்தால் வரவேற்போம் என, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளாா்.
ரஜினியின் ஆன்மிக அரசியல் வெற்றி பெறவேண்டியும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ரஜினி ஆட்சி அமைக்க வேண்டியும், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன் சம்பத் தலைமையில், அக்கட்சியினா் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடா்ந்து உயா்ந்துகொண்டே செல்கிறது. இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதை, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
உஜ்வாலா திட்டத்தில் தமிழக அரசு அதிக பயன்பெற்றுள்ளது. சமையல் எரிவாயுக்கான மானியத்தை அதிகரித்து வழங்கவேண்டும்.
ரஜினியின் ஆன்மிக அரசியலை ஏற்று கமல் வருவதாக இருந்தால் வரவேற்கிறோம். ஆன்மிக அரசியல்தான் தலைமை ஏற்கவேண்டும். அனைத்து தரப்பையும் ஆதரிப்பது ஆன்மிக அரசியல். லஞ்ச ஊழலை அழிப்பது ஆன்மிக அரசியல். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சி, மாநிலத்தில் ரஜினி ஆட்சி. அனைத்துக் கட்சி தொண்டா்களும் ரஜினியின் ஆன்மிக கட்சிக்கு வந்து விடுவாா்கள் என்றாா்.