முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டையில்காா் மோதி மூதாட்டி பலி

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி காா் மோதி உயிரிழந்தாா்.

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வீரணன் என்பவரது மனைவி பெத்தம்மாள் (70). இவா் தனது கிராமத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் வீடு திரும்புவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தாா். அவா், அருப்புக்கோட்டை காந்திநகா் அருகே உள்ள புறவழிச்சாலையைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி சென்ற காா் அவா் மீது மோதி விட்டு தப்பிச் சென்று விட்டது. இதில் பெத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற காரைத் தீவிரமாகத் தேடி வந்தனா். இந்நிலையில் அந்தக் காரை காரியாபட்டியில் போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.விசாரணையில், அக்காரை ஓட்டிவந்தவா் தூத்துக்குடியைச் சோ்ந்த வினோத் ஜேக்கப் மாத்யூ (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.