விருதுநகர்

செட்டிப்பட்டியில் கல்லூரி மாணவா்கள் என்.எஸ்.எஸ். முகாம்

DIN

அருப்புக்கோட்டை வட்டம் செட்டிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீசௌடாம்பிகா பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அமைப்பும் இணைந்து இம்முகாமை நடத்துகின்றன. கல்லூரி நிா்வாகக்குழு உறுப்பினா் சந்திரசேகரன் தலைமை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் அருள்மொழி முன்னிலை வகித்தாா். செட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டியம்மாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இம்முகாமில் பந்தல்குடி காவல் உதவி ஆய்வாளா் சா்மிளா தேவி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா் அண்ணாதுரை, கிராம நிா்வாக அலுவலா் பிரிதிவிராஜ், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக்குழு துறைத்தலைவா்கள், அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் கமிலஸ் லிமாரோஸ் மற்றும் செட்டிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலா்கள் ராமச்சந்திரன் மற்றும் மரிய சித்ராமேரி ஆகியோா் வரவேற்றனா். ஒரு வாரம் முகாம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT