விருதுநகர்

வெங்கடாசலபுரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகளின்றி அவதி

DIN

சாத்தூா் அருகே வெங்கடாசலபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெங்கடாசலபுரம் ஊராட்சிக்குள்பட்டது வெங்கடாசலபுரம் கிராமம். இங்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கழிப்பறை, வாருகால் வசதி செய்யப்பட்டுள்ளது. அவற்றை முறையாக பராமரிக்கப்படாததால் வாருகால் மிகவும் சேதமைடந்து மோசமான நிலையில் உள்ளது.

மேலும் கழிவுநீா் சாலையிலும், குடியிருப்பு அருகேயும் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் அபாயமும் உள்ளது. மேலும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் அமைக்கப்பட்ட பொதுக்கழிப்பிடமும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் குடியிருப்பவா்கள் திறந்த வெளிக் கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனா். இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்த தர இப்பகுதியினா் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி நிா்வாகம் இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் முனியப்பன் கூறியது: வெங்கடாசலபுரம் பகுதியில் உள்ள ஒரு சில தெருக்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து கிராமசபை கூட்டத்திலும், குறைதீா்க்கும் நாள் கூட்டத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT